Pages

Wednesday 25 June 2014

நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும் 6

நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும் , வணங்கினால்தான் தருவாரா இல்லையென்றால் விட்டுவிடுவாரா... ? அது ஒன்றும் இல்லை நாம் செய்யும் நன்மை தீமைகள் கொண்டுதான் நமது நிம்மதி இருக்கிறது , நீ நன்மைகள் செய்யும் போது உனக்கு நிம்மதி வருகிறது , அதுதான் உன்னை நீ கடவுளாக பார்க்க வைக்கும் கண்ணாடி . சிறு உதவியும் செய்யாமல் இருந்தால் உனது எண்ணங்கள் உனது  சுய நலத்தை மட்டும் பார்க்கும் . உன்னக்காக மற்றவர்கள் உதவி செய்யும் போது நீ ஏன் அதை நினைத்து பார்க்க மறுக்கிறாய். இதுதான் உனது கெட்ட எண்ணத்தின் ஆரம்பம் . நீ உணர்ந்து விடும் போது அது உன்னை விடாது. நீ கடவுளை வணங்கும் போது உன் நினைவு நாமும் கடவுள்தான் மாற போகிறோம் என்ற எண்ணம் உனது மனதில் வர வேண்டும். இப்போதே மற்றவர்களும் இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .

Tuesday 24 June 2014

நமது குணங்கள் | மாயை உலகம் 5

ஒவ்வொரு நாளும் பூமி சுத்துகிறது , எவ்வளவு காலம் சுத்துகிறது என்று  யாராலும் சொல்ல முடியாது. அறிவியல் அறிஞர்கள் 10000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது . அப்படி தோன்றியது, இப்படி தோன்றியது என்று சொல்லி கொண்டே போகலாம். இருந்தும் சரியாக யாரால்லும் சொல்ல முடிய வில்லை .ஏன் ? எப்படி  என்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் கற்பது எல்லாம் பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல , வாழ்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதற்காகவும்தான் . நாம் அதை மறந்து எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று இருக்காதிர்கள் , கடைசியில் வருத்தபடுவிர்கள் . நாம் வருகிறோம் , படிக்கிறோம் , சம்பாதிக்கிறோம் , அனுபவிக்கிறோம் ,இருந்தும் போதவில்லை என்ற வார்த்தை மட்டும்தான் நம் வாயில் வருகிறது. ஏன் நாம் நம்மை பார்ப்பதை விட பிறரை கவனிக்கிறோம் . அவன் அங்கு செல்கிறான் நாமும் செல்ல வேண்டும் , அவன் அதை சாப்பிடுகிறான் அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் வந்து , பின் அவனாகவே மாறுகிறோம் . நமது குணங்கள் மாறுகிறது பழக்கம் மாறுகிறது . நம் உறவினர் நண்பர்களிடம் இருந்து பிரிந்து விடுகிறோம் , புதிய நண்பர்கள் புதியஉலகம் என்று நம்மை மறக்கிறோம் , ஏன் பின் அவன் சொந்த இடத்திற்கு வந்தாலும் அவனது செய்கையை மாற்றிக்கொள்ள முடியவில்லை . ஏன் ? அவனது பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டே  இருக்கும். அவன் மனது மாறி விடும். இல்லாதவன் இருப்பவன் என்ற எண்ணம் வரும் போது உண்மையான நண்பர்கள் கூட  அவன் பின் போவதில்லை. வாழ்க்கையில் இருள் தொடரும் நேரம் வந்ததும் அவனது தவறுகள்  உணர்கிறான்.
 

ஆன்மா 4

அப்படி மாலை அணிந்து கும்பிடுவது எதற்கு என்றால் அவர் வாழும் போது அவர் பிள்ளைகளுக்கு கடவுள் . அதுபோல் மற்றவர்கள் வாழ்வதற்காக வாழ்பவர்கள் கடவுள். ஆன்மாவில் சக்தி மிக பெரியது . அவர்களை கும்பிடும் போது அவர்களது நினைவுகள் வரும். அந்த நினைவுகள் நமது எண்ணத்தை நல் வழிபடுத்தும் . எனவேதான் கடவுள் பலர் தோன்றினர். உனது செயல்கள் உன்னை தீர்மானிக்கும் கடவுளா இல்லையா என்று ... மற்றவர்கள் தூற்றும்படி நடக்கும் போது உடல் சக்தி இருந்தாலும் ஆன்மாவின் சக்தி பலவீனம் ஆகும் .

சிந்தித்து பாருங்கள் : 3

சிந்தித்து பாருங்கள் :
நாம் இறந்தவர்களுக்கு பல சடங்குகள்  செய்கிறோம். அவரை நாம் கடவுளாக பாவித்து அவரது படத்திற்கு மாலை அணிந்து வணக்குகிறோம் . அதுபோல்தான் வந்தது நம் கலாச்சாரம். ஏன் அவரை வணங்குகிறோம் என்றால் எல்லோரது உடம்பிலும் உயிர் என்னும் சக்தி இருக்கிறது. நம் முன்னோர்களுக்கு அப்போதே ஆற்றலை அழிக்க முடியாது என்று தெரியும். ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு சக்தி உண்டு   எப்படி என்றால் சிங்கம் பார்க்கும் போது பயம் வருகிறது . அதுபோல் முயலை பார்க்கும் போது கருணை வருகிறது . இது நம் கண்களின் பார்வை. இருந்தும் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பது விதி .

நம் கலாச்சாரம் 2

நம் கலாச்சாரம் மாறும் போது கண்டிப்பாக விழிப்புணர்வு தேவை. நாகரிகத்தின் உச்சகட்டம் கலாச்சார சீரழிவு. நாம் ஒவ்வொரு பொருளை உருவாக்கும் போது அதற்கு நாம் கடவுள் ஆகிறோம் . நம் தந்தை நமக்கு கடவுள். முற்காலத்தில் நாம் யாரை வணங்கினோம் என்று தெரியுமா ? நாம் நம்மைதான்  வணங்கினோம். ஒவ்வொரு மனிதனும் கடவுளே.


Friday 20 June 2014

நான் கடவுளா | kadavul 1

நான் கடவுளாக மாறவில்லை, உணர்கிறேன் . உங்களால்லும்  உணர முடியும்  கருணை இருந்தால் . இதை போதிப்பதாக நினைக்காதிர்கள் .
எல்லாரிடமும் கடவுள் இருக்கிறார் . ஆனால் அதை நீங்கள்  உணரும் விதம்தான் வேறு.

boopathisai@gmail.com